

ஊத்துக்கோட்டை:
செங்குன்றம் அருகே உள்ள ஆரிக்கம்பட்டை சேர்ந்தவர் ஜெயபால். பூ வியாபாரி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஜெயபால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக சுற்றி வந்தார். இந்த நிலையில் ஜெயபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த இளம்பெண், அவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது ஜெயபால் இளம்பெண்ணை திட்டி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து மயங்கினார்.
அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தார்.