ரெட்டியார்பாளையத்தில் பட்டதாரி பெண் மாயம்

ரெட்டியார் பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி இருந்த பட்டதாரி பெண் மாயமானார்.
ரெட்டியார்பாளையத்தில் பட்டதாரி பெண் மாயம்
Published on

புதுச்சேரி:

கண்டமங்கலம் அருகே நவமால் மருதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. விவசாயி. இவரது மகள் சுவேதா (வயது 20). பி.காம் பட்டதாரி.

இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் பெற்றோர் சுவேதாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் விக்டோரியா நகரில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்க வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று விடுதியில் இருந்த சுவேதாவை திடீரென காணவில்லை. அவரது வீட்டில் விசாரித்த போது, அங்கும் சுவேதா செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அந்த விடுதியின் காப்பாளர் லீமாரோஸ் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுவேதாவை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com