ரெட்டியார்பாளையத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

ரெட்டியார்பாளையத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

ரெட்டியார்பாளையம் புதுநகர் அணைக்கரை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகன் (வயது47). இவர் கதிர்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கலா (39). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அதுபோல நேற்றும் வேலைக்கு செல்லாமல் முருகன் மதுகுடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கணவரை கண்டித்து விட்டு வழக்கம்போல் கலா வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் மாலை வேலைமுடிந்து கலா வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் அறையில் மின் விசிறியில் கயிறால் முருகன் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com