

புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் பாவாணர் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விக்டர்டேவிட் (வயது28). இவர் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணி, அருண், சதீஷ், சிவா ஆகிய 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். விக்டர்டேவிட் இவர்களை பார்த்து முறைத்ததாக தெரிகிறது.
இதனால் விக்டர் டேவிட்டை அந்த 4 பேர் கொண்ட கும்பல் தட்டிக்கேட்டது. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
மேலும் அவர்கள் விக்டர் டேவிட்டை கையால் தாக்கினர். அருகில் இருந்த பூந்தொட்டியாலும் டேவிட் விக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த விக்டர்டேவிட் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 4 வாலிபர்களை தேடிவருகிறார்கள்.