சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பிரச்சாரத்துடன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதி மற்றும் 20-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக 18 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.

கடைசி நாளான இன்று பாஜக சார்பில் அமித் ஷா, முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவை கடுமையாக தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர். 

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தகவல் வெளியானது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், 90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com