நூற்றாண்டு பழமையான எலும்பு கூடுகள் கண்டெடுப்பு: உத்தர்கண்டில் பரபரப்பு

உத்தர்கண்ட் மாநிலத்தில் கட்டுமான பணிகளின் போது நூற்றாண்டுகள் பழமையான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு பழமையான எலும்பு கூடுகள் கண்டெடுப்பு: உத்தர்கண்டில் பரபரப்பு
Published on

டேராடூன்:

உத்தர்கண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் கட்டுமான பணிகளின் போது பழமையான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹல்தவானி பகுதியின் கவுலாபூரில் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளின் போது பணியாளர்களால் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகள் எந்தளவு பழமையானவை என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

அப்பகுதி வாசிகளின் படி அங்கு இடுகாடு இருந்ததில்லை என்றே தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகள் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த எலும்பு கூடுகள் ப்ரிட்டனை எதிர்த்து போரிட்ட ரொகிலியா சீஃப்டெயின்களுடையதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. சிலர் இந்த எலும்பு கூடுகள் மலேரியா, ஃபேமைன் போன்றவற்றால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இது குறித்து அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறுகையில் முறையான சோதனை நடத்தப்படாமல் இது குறித்து எவ்வித தகவலும் வழங்க இயலாது என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com