வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைய காரணம் இதுதான்-பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வி அடைய காரணம் என்ன என்பதை கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைய காரணம் இதுதான்-பாகிஸ்தான் கேப்டன்
Published on

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்  கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பாகிஸ்தான் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சினால், 21.4 ஓவரில் 105 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படவே, பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக் கனியை பறித்தனர். இந்த படுதோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:

ஆனால், நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு சவாலானதுதான். ஷாட் பிட்ச் பந்துகளை நாங்கள் சரியாக எதிர்கொள்ளவில்லை. எங்கள் அணியின் முகமது ஆமிர் சிறப்பாக பந்து வீசினார். இங்கிலாந்தில் எப்போதும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com