உ.பி.யில் பாஜகவினர் கொல்லப்பட்டது எதிர்வினை... விவசாய சங்க தலைவர் சர்ச்சை கருத்து

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித்
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித்
Published on

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வன்முறை வெடித்தது. இதில் பாஜகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். 

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. வன்முறையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்திவருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விவசாய சங்க தலைவர்கள் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் பேசுகையில், லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதையடுத்து, வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கொல்லப்பட்டது எதிர்வினை என்று கூறினார். பாஜகவினரை  கொன்றவர்களை குற்றவாளிகளாக கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

லக்கிம்பூர் சம்பவத்திற்கு எதிராக அமைதியான வழியில் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ராகேஷ் திகாயித்தின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com