குஜராத் தேர்தல்: எந்திர கோளாறு காரணமாக தடைபட்ட 6 இடங்களில் இன்று மறுவாக்குப்பதிவு

குஜராத் சட்டசபைக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு காரணமாக தடைபட்ட 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
குஜராத் தேர்தல்: எந்திர கோளாறு காரணமாக தடைபட்ட 6 இடங்களில் இன்று மறுவாக்குப்பதிவு
Published on

காந்திநகர்:

குஜராத் சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலின் போது வத்காம், விராம்கம், தாஸ்க்ரொய், சாவ்லி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு உள்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது.

இதன் காரணமாக, மேற்கண்ட ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், இன்று காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மறு வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com