

மும்பை:
முதலீட்டு பத்திரங்கள் நேரடி விற்பனை தொடர்பாக வங்கிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. குறிப்பாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, வங்கிகள் தாங்கள் பெறும் முதலீடுகளை வர்த்தகம் (எச்.எப்.டி.), விற்பனை (ஏ.எப்.எஸ்.) மற்றும் முதிர்ச்சி (எச்.டி.எம்.) என 3 பிரிவுகளில் வகைப்படுத்த வேண்டும்.
ஆனால் இந்த விவகாரத்தில் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி விதிமீறலில் ஈடுபட்டு உள்ளது. இந்த வங்கியின் எச்.எப்.டி. துறை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாதது கண்டறியப்பட்டு இருக்கிறது.
எனவே அந்த வங்கிக்கு ரூ.58.90 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் காலவரையறை தொடர்பான தவறான புரிதலால் தவறு நிகழ்ந்ததாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கூறியுள்ளது. #tamilnews