அமேதி தொகுதிக்கு குட்பை சொல்ல ராகுல் முடிவு செய்துவிட்டார்: உ.பி. மந்திரி காட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதிக்கு குட் பை சொல்ல ராகுல் காந்தி முடிவு செய்துவிட்டார் என பா.ஜ.க. மந்திரி காட்டமாக தெரிவித்துள்ளார்.
அமேதி தொகுதிக்கு குட்பை சொல்ல ராகுல் முடிவு செய்துவிட்டார்: உ.பி. மந்திரி காட்டம்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் விவசாயிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநில மந்திரி மோஷின் ரசா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி காசோலைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

நான் கடந்த 6 மாதமாக இங்கு வருகிறேன். ஆனால், தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை எங்கும் பார்க்க முடியவில்லை. அமேதி தொகுதிக்கு குட் பை சொல்லும் மனநிலைக்கு அவர் வந்துவிட்டார் என நினைக்கிறேன்.  

பா.ஜ.க. சார்பில் எனக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மேலவை உறுப்பினராகவும் அங்கம் வகிக்கிறேன் என்பதை காங்கிரசாருக்கு நினைவூட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் மந்திரி இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com