

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி அஸ்வினின் அபார பந்து வீச்சால் 183 ரன்னில் சுருண்டது.
அஸ்வின் 16.4 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் 51 டெஸ்ட்டில் 26 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்ததுடன், ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 190 இன்னிங்சில் 25 முறை ஐந்து விக்கெட்டுக்களும், 5 முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 51 போட்டிகளில் 96 இன்னிங்சில் 26 முறை விக்கெட்டுக்களும், 7 முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.