இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை வரை அப்பதவியில் நீடிப்பார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்
Published on

இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் ஐந்து பேருடன் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு நேற்று நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவரான கங்குலி, ‘எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய அணி கேப்டனுடன் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது’ என்று கூறியிருந்தார். இதனால், பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு மேலும் தாமதமாகும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு, இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே, இதுகுறித்து பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி, பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுதரி ஆகியோரிடம் வினோத் ராய், பேசியதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com