

அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் ரூ.14 லட்சத்து 8 ஆயிரத்தில் உணவுதானிய சேமிப்புகிடங்கு அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்நாட்டுவிழா நேற்று நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது ஆத்தூர் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரக்கோணத்திலிருந்து பொய்கைபாக்கம், ஆத்தூர், உரியூர், நகரிகுப்பம் வழியாக தக்கோலம், பேரம்பாக்கம் வரை பஸ்போக்குவரத்து நீடிக்கப்படும் என்றார். மாற்று கட்சினர் பலர் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சிக்கு அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ், அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் மீனா ரகுபதி நன்றி கூறினார்.