அரக்கோணம் அருகே 350 பேருக்கு உதவி பொருட்கள்: சு,ரவி எம்எல்ஏ வழங்கினார்

அரக்கோணம் அருகே 350 பேருக்கு கொரோனா அவசர கால உதவிப் பொருட்களை சு,ரவி எம்எல்ஏ வழங்கினார்.
சு,ரவி எம்எல்ஏ உதவிய பொருட்கள் வழங்கிய காட்சி.
சு,ரவி எம்எல்ஏ உதவிய பொருட்கள் வழங்கிய காட்சி.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே முகப்நாயுடு கண்டிகை, நாகவேடு சம்பத்ராயன் பேட்டை பகுதியில் உள்ள நலிந்தவர்கள், மாற்று திறனாளிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு கொரோனா அவசர கால உதவிப் பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், நெமிலி ஒன்றிய மாணவர் அணி செயலர் வக்கீல் பிரகதீஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

அரக்கோணத்தில் திருநங்கைக்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. அரிசி, மளிகை உதவிப்பொருட்கள் வழங்கினார். மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அற்புதராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com