தேனி அருகே ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தேனி:

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், ரேஷன் கடை பணியாளர்களை கொரோனா மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 100 சதவீதம் அத்தியாவசிய பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடை பணியாளர்கள் தேனி மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பொன்.அமைதி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், மாநில மையத்தின் வழிகாட்டுதல்படி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com