குளச்சல் அருகே பயணிகள் ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்

குளச்சல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குளச்சல்:

குளச்சல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்புராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட் டிருந்தனர். அவர்கள் சைமன் காலனி பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பயணிகள் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினார்கள்.

ஆனால் நிற்காமல் சிறிது தூரம் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். போலீசார் அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் இறுக்கைக்கு கீழே சிறு, சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் டிரைவர் இருக்கைக்கு கீழும் சிறு, சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோவில் இருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நாகர்கோவிலில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். ஆட்டோவை ஓட்டிவந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com