

சென்னை:
திருவள்ளூர் அருகே அபூர்வ வகை வெள்ளை நாகம் பிடிபட்டது. அதனை கிண்டி சிறுவர் பூங்காவில் வன ஊழியர்கள் ஒப்படைத்து உள்ளனர்.
பூங்காவில் உள்ள வெள்ளை நாகத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நாகம் சுமார் 5 அடி நீளம் உள்ளது.
இது குறித்து வன உயிரின அதிகாரிகள் கூறும் போது, வெள்ளை நிற நாகம் இங்கு பிடிபடுவது அரிது. இந்த வகை நாகம் இலங்கையில் அதிக அளவு உள்ளது. கிண்டி பூங்காவில் வெள்ளை நிற நாகம் இருப்பது இது முதல் முறை. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.
வழக்கமாக வெள்ளை நிற நாகத்துக்கு கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இங்குள்ள நாகத்துக்கு கண்கள் கறுப்பு நிறத்தில் உள்ளது’’ என்றார்.