வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே பறக்க முடியாமல் அமர்ந்து இருந்த அரிய வகை ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
அரிய வகை ஆந்தை
அரிய வகை ஆந்தை
Published on

வந்தவாசி:

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக உள்ள சிறிய கடைக்கும் கோவிலின் சுற்று சுவருக்கும் இடையே உள்ள பகுதியில் நேற்று காலை அரியவகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் அமர்ந்து இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தீயணைப்பு அலுவலர் சுப்புராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆந்தையை மீட்டு தீயணைப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அதை தொடர்ந்து வனக்காப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் ஆந்தையை ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com