ராணிப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

ராணிப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை):

கர்நாடக மாநிலம் பெங்களூரு பந்தரா பள்ளி பகுதியை சேர்ந்த ஹேமந்தா என்பவரின் மகன் ராகுல் (வயது 16). இவர், நேற்று முன்தினம் தனது உறவினரை பார்க்க ராணிப்பேட்டை அருகே வாணாபாடி ஏரிகோடி, மாணிக்க நகர் பகுதியில் உள்ள தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வாணாபாடி அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்துவிட்டார். இதனையடுத்து சிப்காட் தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் மூழ்கிய சிறுவனை பிணமாக மீட்டனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com