திருமக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

திருமக்கோட்டை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு ரங்கோலி போட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ரங்கோலி போட்டி
ரங்கோலி போட்டி
Published on

திருமக்கோட்டை:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தலின்படியும், திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் லேகா தமிழ்செல்வன் வழிகாட்டுதலின் பேரிலும் திருமக்கோட்டை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு ரங்கோலி போட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாஜெயசீலன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் தில்லை மணிகண்ணன், கோட்டூர் வட்டார வள மேலாளர் அழகர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ரங்கோலி கோலம் மூலம் சிறப்பாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை திருமக்கோட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர் பவானி செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com