தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டி

பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. #rangasamy #nrcongress
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டி
Published on

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளராக வெங்கடேசன் களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. 

இதுவரை என்.ஆர்.காங்கிரஸ் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. பதவியை இழந்த அசோக்ஆனந்து தனது குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவித்து விட்டார். 

இதனால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனா என்ற புவனேஸ்வரன், நந்தா ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் சொந்த அக்காள் மகன் செழியன் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. 

பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ரங்கசாமி இன்று அறிவித்தார். ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ரங்கசாமி அறிவிக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. #rangasamy #nrcongress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com