

இதில் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் வெற்றி பெறவே இல்லை. இந்திய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் கனவு என்று ஹெரத் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹெராத் கூறுகையில் ‘‘இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவு. அப்படி வெற்றி பெற்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது அதிக அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது.