ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் நடையானது நாளை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்
Published on

ராமேசுவரம்:

நாளை (26-ந் தேதி) காலை 8 மணியில் இருந்து 11.20 மணிக்கு வரையிலும் முழு சூரிய கிரகணம் நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும்.

தொடர்ந்து காலை 9.35 மணிக்கு அக்னிதீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று, மதியம் 12 மணியளவில் கோவில் திறந்து கிரகண அபிஷேக நடந்து வழக்கமான பூஜைகள் நடக்கும். எனவே நாளை காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவோ, புனித கிணறுகளில் நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 12 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com