கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #KarnatakaAssembly #KarnatakaSpeaker
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வு
Published on

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க.வை முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், பதவி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.  

விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com