தடையை மீறி திருமணம்: சசிகலா புஷ்பா, ராமசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - முதல் மனைவி

நீதிமன்ற தடையை மீறி திருமணம் செய்த சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் ராமசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக ராமசாமியின் முதல் மனைவி கூறியுள்ளார்.
தடையை மீறி திருமணம்: சசிகலா புஷ்பா, ராமசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - முதல் மனைவி
Published on

சென்னை:

சசிகலா புஷ்பா எம்.பி. தனது கணவர் லிங்கேஸ்வரனை சமீபத்தில் விவாகரத்து செய்தார். அதே நேரத்தில் அவர் தனது சட்ட ஆலோசகரும், தனியார் பல்கலைக்கழக துணைவேந்தருமான ராமசாமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் அவரது திருமணம் நடப்பதாக பத்திரிகை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராமசாமி ஏற்கனவே மதுரையை சேர்ந்த சத்தியப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்ததாகவும், அவர் மூலம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டது.

தனது கணவருக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்ததும் அவர் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை குடும்பல கோர்ட்டு ஆகியவற்றில் கடந்த 20-ந்தேதி புகார் கொடுத்தார்.

அவரது வழக்கை  விசாரித்த நீதிமன்றம், ‘ராமசாமி, சத்தியப்பிரியா இடையே திருமணம் நடந்து அவர்களுக்கு குழந்தை உள்ளது. அவர்களுடைய திருமணம் இப்போதும் செல்லும் எனவே ராமசாமி - சசிகலா புஷ்பா திருமணத்திற்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பு கூறியது.

ஆனால் அதையும் மீறி திட்டமிட்டபடி டெல்லி ஓட்டலில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. கோர்ட்டு தடையை மீறி திருமணம் நடந்திருப்பதால் சசிகலா புஷ்பா-ராமசாமி இருவரும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனது கணவருக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று தெரிந்ததுமே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றேன். அந்த ஆணையை நான் டெல்லியில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படும் ஓட்டலுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினேன். மேலும் டெல்லி போலீஸ் கமி‌ஷனருக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் கோர்ட்டு ஆணையுடன் சேர்த்து மனு அனுப்பினேன். ஆனால் அதையும் மீறி எனது கணவர் சசிகலா புஷ்பாவை திருமணம் செய்து இருக்கிறார்.

அவர்கள் கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை. எனவே நான் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறேன். இதில் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com