ராமாபுரம் அருகே இளம்பெண் தற்கொலை

ராமாபுரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமாபுரம் அருகே இளம்பெண் தற்கொலை
Published on

போரூர்:

ராமாபுரம், முல்லைநகர் 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் குமரன். கார் பென்டர். இவரது மனைவி அமுதா (வயது34). குமரன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குமரன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதை அமுதா கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அமுதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com