ராமாபுரம் அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு

ராமாபுரம் அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு
Published on

போரூர்:

சென்னை ராமாபுரம் பூத்தப்பேடு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரெட்டி (25). டி.சி.எஸ். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். வெங்கட்ரெட்டி நேற்று பணி முடிந்து அதிகாலை 4 மணி அளவில் வெங்கடேஸ்வரா நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வெங்கட் ரெட்டியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன், ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

அசோக்நகர் 100 அடி சாலையில் பஸ்சுக்காக காத்து நின்ற உளுந்தூர்பேட்டையை சேர்ந்த செல்வம் ஏன்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com