ராமநாதபுரம் அருகே கொத்தனார் தற்கொலை

ராமநாதபுரம் அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பசும்பொன்நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). கொத்தனார். இவருக்கு திருமணமாகி கோவிந்தம்மாள்(40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு கோவிந்தம்மாள் குழந்தைகளுடன் சத்திரக்குடி அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நாகராஜ், மனைவியை அங்கு சென்று அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே மனம் உடைந்த நாகராஜ் வீட்டில் மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com