

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 205 மதுபாட்டில்களையும், மதுவிற்பனைக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.