ராமநாதபுரத்தில் நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது

ராமநாதபுரத்தில் உள்ள நகை கடையில் ஆபரணங்கள் வாங்குவது போல் வந்து நகை திருடிய விருதுநகரைச் சேர்ந்த பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் சிகில் ராஜவீதியில் மனோகரன் என்பவரின் நகை கடை உள்ளது. இங்கு நேற்று மாலை 2 பெண்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்க வந்தனர்.

இருவரும் தேர்வு செய்த நகை மாடல் பிடிக்கவில்லை என்று கூறி விற்பனையாளர் காட்டிய சாம்பிள் நகைகளை திரும்ப கொடுத்தனர். அதில் சில நகை மாயமானது குறித்து உரிமையாளரிடம் விற்பனையாளர் தெரிவித்தார்.

இது குறித்து அந்த பெண்களிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரண்பட்ட தகவலை தெரிவித்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது கடையில் திருடிய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, தங்க நகைகளை அந்த 2 பெண்களும் சேலை முந்தானையில் பதுக்கியது தெரியவந்தது.

இது தொடர்பான புகாரின்படி விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி ஆர்.ஆர்.நகர் .மனைவி அழகுமார் (வயது 26), ஆர்.எஸ்.ஆர் நகர் சங்கர் மனைவி சரோஜா (29) ஆகியோரை பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com