அமைச்சர்கள் ராஜினாமாவால் பா.ஜ.க. பி.டி.பி. கூட்டணியில் பிளவு இல்லை - ராம்மாதவ்

அமைச்சர்கள் ராஜினாமாவால் பா.ஜ.க. பி.டி.பி. கூட்டணியில் பிளவு இல்லை - ராம்மாதவ்

ஜம்மு காஷ்மீர் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிளவும் ஏற்படவில்லை என பா.ஜ.க. பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். #AsifaBano #RamMadhav
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூன்று போலீசார் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் இரு பா.ஜ.க. மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, அந்த பேரணியில் பங்கேற்ற மத்திய மந்திரிகளான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிளவும் ஏற்படவில்லை என பாஜக பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மந்திரிகள் ராஜினாமா செய்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்க முயற்சி செய்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தியிடம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம்.  

மந்திரிகள் ராஜினாமா செய்ததால் ஆளும் பி.டி.பி. மற்றும் பா.ஜ.க. இடையிலான கூட்டணி ஆட்சியில் பிரசனையில்லை. அவர்களின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார். ஓரிரு நாளில் பிரச்சனை சரியாகி விடும் என தெரிவித்துள்ளார். #Asifa #AsifaBano #RamMadhav

X

Maalai Malar
www.maalaimalar.com