சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமனம்: முக்கிய துறை அதிகாரிகள் மாற்றம்

சி.பி.ஐ, உளவுத்துறை மற்றும் சி.ஆர்.பி.எப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமனம்: முக்கிய துறை அதிகாரிகள் மாற்றம்
Published on

புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ உள்ளிட்ட முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்து மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக குர்பாச்சன் சிங், சி.ஆர்.பி.எப் சிறப்பு டி.ஜி.யாக சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com