டெல்லியில் எம்.பி. அமர்சிங் உடல் தகனம்

பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் உடல் டெல்லி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
எம்.பி. அமர்சிங்
எம்.பி. அமர்சிங்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. அமர்சிங், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். அவரது உடல் தனி விமானத்தில் டெல்லி கொண்டுவரப்பட்டது. டெல்லியில் சாதர்பூரில் உள்ள பண்ணை இல்லத்தில் அவரது உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், ஜோதிர்ஆதித்ய சிந்தியா எம்.பி., நடிகை ஜெயபிரதா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நேற்று டெல்லி மயானத்தில் அமர்சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய 2 மகள்களும் சிதைக்கு தீ மூட்டினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இறுதிச்சடங்கில் குடும்பத்தினர், நடிகை ஜெயபிரதா உள்பட குறைவான நபர்களே கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com