காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் அமளி - மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் அமளியால் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #BudgetSession #RajyaSabha #Adjourned
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் அமளி - மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை வழக்கம் போல் கூடியது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பி.என்.பி. வங்கி மோசடி தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரி ஒய்.எஸ்.சவுத்ரி ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் பிரிவினை குறித்து பேசினார். அவரது பேச்சுக்கு மற்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததால் அவையில் கூச்சல் நிலவியது. இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் முடங்கி வருவது மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #BudgetSession #RajyaSabha #Adjourned  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com