சீனாவுடனான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை - ராஜ்நாத் சிங்

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. கடந்த 3 மாதமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. 

இதற்கிடையே, பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சீனா உடனான மோதல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

இந்நிலையில், சீனா உடனான எல்லையில் தற்போதைய நிலை குறித்து, ராஜ்நாத் சிங் மக்களவையில் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com