இணைய வழி குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணைய வழி குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இணைய வழி குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி:

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணைய வழி குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பணப் பயன்பாட்டு அட்டைகள் மற்றும் இ-வாலெட் ஆகியவற்றில் இருந்து பணத்தை நூதன முறையில் திருடும் இணைய வழி(சைபர்) குற்றங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பது குறித்த உத்திகளை வகுப்பது தொடர்பான உயர் மட்ட ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முகமைகளை சேர்ந்த அதிகாரிகள், தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப நடந்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து விளக்கியதுடன் அறிக்கைகளும் அளித்தனர். அதேபோல் இத்தகைய சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் மத்திய மந்திரியிடம் எடுத்து கூறினர்.

இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த கூட்டத்தில் சைபர் குற்றங்களுக்கு தீர்வு காண சட்ட மற்றும் தொழில் நுட்ப ரீதியான நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முகமைகள் விசாரணையை மேற்கொண்டு கடும் நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும், அனைத்து முகமைகளும் இந்த மோசடிகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என மந்திரி உத்தரவிட்டார். இது தொடர்பாக மந்திரிகளுக்கு இடையேயான குழு ஒன்று அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com