பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு பயணம்

பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் செப்டம்பர் 2-ம் தேதி ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி:

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஜப்பான்,  தென்கொரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜப்பான் பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com