ராஜீவ் குமார்
ராஜீவ் குமார்

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் நியமனம்

சுபாஷ் சந்திர கார்க், மின்துறை செயலாளராக மாற்றப்பட்டத்தையடுத்து மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Published on

புதுடெல்லி:

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜிவ் குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்குமுன் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், மின்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து, காலியாக உள்ள நிதித்துறை செயலாளர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜீவ் குமார் தற்போது நிதிச்சேவைகள் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், 1984-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 

X

Maalai Malar
www.maalaimalar.com