உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக ராஜிவ் கவுபா நியமனம்

உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜிவ் மஹ்ரிஷி ஓய்வு பெற்றதை அடுத்து புதிய செயலாளராக ராஜிவ் கவுபா நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக ராஜிவ் கவுபா நியமனம்
Published on

புது டெல்லி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜிவ் மஹ்ரிஷி நேற்றுடன் ஓய்வு பெற்று, மத்திய கணக்கு தணிக்கை அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக இருந்த ராஜிவ் கவுபா புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1982-ம் ஆண்டின் பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபா பீகார் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து விட்டு மத்திய அரசுப்பணிக்காக வந்தவர். மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் முதன்மை செயலாளராகவும், உள்துறையின் கூடுதல் செயலாளராகவும் ராஜிவ் கவுபா ஏற்கனவே பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com