துப்பாக்கி சூடு நடந்த தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை காரில் இருந்தவாறு பார்வையிட்ட ரஜினி

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த கலெக்டர் அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்த் காரில் இருந்தவாறு பார்வையிட்டார். #ThoothukudiFiring #Rajinikanth
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்த காட்சி.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்த காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்பதற்காக நடிகர் ரஜினி இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியில் கலெக்டர் அலுவலகம் வரும் போது அருகில் இருந்தவர்கள் ரஜினியிடம் தெரிவித்தனர். அப்போது காரில் இருந்தவாறே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

புதுக்கோட்டை, வாகைகுளம், கோரம்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் நின்று அவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து வ.உ.சி.கல்லூரி முதல் வி.வி.டி.சிக்னல் வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தை பார்த்ததும் ரஜினி எழுந்து நின்று ரசிகர்களை பார்த்து கும்பிட்டவாறே சென்றார்.

பின்னர் வி.வி.டி.சிக்னலை தாண்டி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. பின்னர் காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் சென்ற ரஜினி சிகிச்சை பெற்று வரும் ஓவ்வொருவரிடமும் தனித்தனியாக சென்று நலம் விசாரித்தார்.  #ThoothukudiFiring #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com