தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி உள்ளார்: அர்ஜுன மூர்த்தி

அரசியல் கட்சி தொடங்கமாட்டேன் எனக் கூறிய ரஜினிகாந்த், தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் என அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அர்ஜுன மூர்த்தி (கோப்புப்படம்)
அர்ஜுன மூர்த்தி (கோப்புப்படம்)
Published on

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3-ந்தேதி கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரியில் கட்சி தொடக்கம். டிசம்பர் 31-ந்தேதி அதுகுறித்து அறிவிப்பு எனத் தெரிவித்திருந்தார். ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.

ஆனால், நேற்று அரசியல் கட்சி தொடங்கமாட்டேன் என திடீரென டுவிட்டரில் அறிக்கை மூலம் அறிவித்தார். அரசியல் கட்சி தலைவர்கள்  ரஜினிகாந்த் முடிவை ஆதாரித்தாலும், அவரின் ரசிகர்களால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று காலை ரஜினிகாந்த்வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவருக்கு எதிராக சில விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அர்ஜுன மூர்த்தி கூறியதாவது:-

* தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் உள்ளார்

* மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று ரஜினி எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் 

* யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம்

* தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார்

* ரஜினியின் மக்கள் சேவையில் உடனிருப்பேன்

* எனக்கு மோடியும், ரஜினியும் இரண்டு கண்கள்

எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com