ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆர்.கே.நகர் வாக்கு நிலவரம் வெளியிடப்படும்: ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தகவல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆர்.கே.நகர் வாக்கு நிலவரம் வெளியிடப்படும்: ராஜேஷ் லக்கானி
Published on

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காக ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக வாக்குப்பதிவை கண்காணித்து வருகிறார்.

இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், ‘ஆர்.கே.நகர் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் தெரிவிக்கப்படும். வாக்குப்பதிவை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கிறோம். வாக்குப்பதிவை சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவும் பார்த்து வருகிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com