மாறுதல் உத்தரவை வேலுச்சாமியிடம் நேரில் சொன்ன ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியான வேலுச்சாமியிடம் மாறுதல் உத்தரவை ராஜேஷ் லக்கானி நேரில் சென்று தெரிவித்தார்.
மாறுதல் உத்தரவை வேலுச்சாமியிடம் நேரில் சொன்ன ராஜேஷ் லக்கானி
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி சர்ச்சைக்குள்ளானதால் அவரை இன்று மதியம் தேர்தல் கமி‌ஷன் மாற்றியது. அவருக்கு பதிலாக புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயரை நியமித்தது.

இந்த மாறுதல் உத்தரவை உடனடியாக வேலுச்சாமியிடம் தெரிவிக்க தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி முயன்றார். ஆனால் அப்போது வேலுச்சாமி மாநகராட்சி அலுவலகத்தில் கமி‌ஷனர் கார்த்திகேயனுடன் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இருந்தார். அதனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் இருந்து காரில் ரிப்பன் மாளிகை சென்றார். அங்கு ஆலோசனை கூட்டத்தில் இருந்த வேலுச்சாமியை அழைத்து “உங்களுக்கு மாறுதல் உத்தரவு வந்துள்ளது” என்று கூறினார். இதையடுத்து அந்த ஆலோசனை கூட்டமும் சிறிது நேரத்தில் முடிக்கப்பட்டது. இதுபற்றி ராஜேஷ் லக்கானிடம் கருத்து கேட்க முற்பட்டபோது, அவர் வேகமாக காரில் ஏறி சென்று விட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com