ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- நீதிபதி கேள்வி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜேஷ் தாஸ் (கோப்புப்படம்)
ராஜேஷ் தாஸ் (கோப்புப்படம்)
Published on

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை உயர்நீதிமன்றம் தானேக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இன்று நடைபெற்ற விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

* சிபிசிஐடி விசாரணை சரியான கோணத்தில் செல்கிறதா என கண்காணிக்கப்படும்

* ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?

* இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது

எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com