ராஜபாளையம் அருகே நடமாடும் ரேஷன் கடை- ராஜவர்மன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ராஜபாளையம் அருகே நடமாடும் ரேஷன் கடையை ராஜவர்மன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜவர்மன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்.
ராஜவர்மன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்.
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரி, ஆப்பனூர், அனந்தப்ப நாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நடமாடும் ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சங்கை வேல்முருகன், மாநில ஜெ.பேரவை துணை செயலாளர் வக்கீல் சேதுராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், பொருளாளர் சுப்பையா துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் முருகபூபதி, அவைத்தலைவர் முருகானந்தம், கவுன்சிலர் சீத்தாராம் சுப்ரமணியம், மேல ராஜகுல ராமன் ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் குட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com