ராஜஸ்தான் இடைத்தேர்தல்: அல்வாரில் 65.2 சதவீதம், அஜ்மீரில் 61.86 சதவீதம் வாக்குப்பதிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார், அஜ்மீர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் இடைத்தேர்தல்: அல்வாரில் 65.2 சதவீதம், அஜ்மீரில் 61.86 சதவீதம் வாக்குப்பதிவு
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார், அஜ்மீர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மற்றும் அஜ்மீர் பாராளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று  நடைபெற்றது.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசையும், ராஜஸ்தான் மாநில அரசையும் மதிப்பீடு செய்யும் அளவுக்கோலாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தல் தேசிய அளவில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகு ஷர்மா, பா.ஜ.க. வேட்பாளர் ராம்ஸ்வரூப் லாம்பா உள்பட மொத்தம் 23 பேர் போட்டியிடுகின்றனர். அல்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங் யாதவ், பா.ஜ.க. வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் யாதப் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அல்வாரில் 65.2 சதவீத வாக்குகளும், அஜ்மீரில் 61.86 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இதேபோல், மன்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக சக்தி சிங், காங்கிரஸ் சார்பில் விவேக் தகத் உள்பட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 78.78 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் பிப்ரவரி மாதம் முதல் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com