ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி - முதல் மந்திரி வசுந்தரா ராஜே ரூ.2 லட்சம் நிதியுதவி

ராஜஸ்தான் மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து பலியான 9 பேர் குடும்பத்துக்கு முதல் மந்திரி வசுந்தரா ராஜே ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி - முதல் மந்திரி வசுந்தரா ராஜே ரூ.2 லட்சம் நிதியுதவி
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் பேவார் பகுதியில் உள்ள ஓட்டலில் திருமண விழா நேற்று இரவு நடைபெற்றது. 2-வது மாடியில் உள்ள சமையல் கூடத்தில் சமையல் வேலைகள் நடைபெற்றபோது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 9 பேர் பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து பலியான 9 பேர் குடும்பத்துக்கு முதல் மந்திரி வசுந்தரா ராஜே ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலிண்டர் வெடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com