ராஜஸ்தானில் பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைப்பு - வசுந்தரா ராஜே

ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இன்று அறிவித்துள்ளார். #VasundharaRaje
ராஜஸ்தானில் பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைப்பு - வசுந்தரா ராஜே
Published on

ஜெய்பூர் :

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.5 பைசா குறைய வாய்ப்புள்ளது. 

மேலும் பெட்ரோல் மீதான விற்பனை வரி 30 முதல் 26 சதவீதமும், டீசல் மீதான விற்பனை வரி 22 முதல் 18 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்றும் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். #VasundharaRaje

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com