ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதல்- 10 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் பேருந்து
விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் பேருந்து
Published on

பிகானர்:

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் வந்த லாரி, பேருந்தின் மீது திடீரென மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com